நான் உங்களிடம் சொல்ல விரும்பும் விசயம்...
இதில் தோன்றும் பெண்மணி, பஹல்கால் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நார்வாலின் துணைவி ஹிமான்ஷி நார்வால். அவர் ஊடகங்களிடம் கூறுகையில்,
"நான் உங்களிடம் சொல்ல விரும்பும் விசயம் நாம் முஸ்லிம்களுக்கும், காஷ்மீரிகளுக்கும் எதிராக மக்கள் செல்வதை அனுமதிக்கக் கூடாது. நமக்கு தேவையானது அமைதி... அமைதி மட்டுமே. நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும். யார் இந்த காரியத்தை செய்தார்களோ, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அவர் திட்டவட்டமாக, இரத்தவெறி பிடித்திருக்கும் ஊடகங்களையும், விஷமக் கும்பலையும் அம்பலப்படுத்தியுள்ளார். ஹிமான்ஷி அவர்கள் இஸ்லாமிய வெறுப்புக்கு எதிரானவர். கஷ்மீர் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அனுமதிக்கக் கூடாதென்று கருதுபவர்...
அவர் "அமைதி, அமைதி மட்டுமே" என்று அழுத்தந்திருத்தமாக மீண்டும் மீண்டும் அறைகூவல் விடுக்கிறார்.
ஒரு உயர் சாதி இந்துவாகவும், கடற்படைத் தளபதியின் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருப்பதால், அவர் ஒரு பரிவார ஆதரவாளராக இருப்பார் என்று நினைத்த, இஸ்லாமிய வெறுப்பையும், பாகிஸ்தானுக்கு எதிராக போர் முழக்கங்களையும் அவரிடம் எதிர்பார்த்து ஒலிவாங்கியுடன் சென்ற ஊடகங்கள் திகைத்துப்போயின.
ஹிமான்ஷி அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்... இந்த நேரத்தில் நீங்கள் காட்டிய இந்த தைரியத்திற்கு.....
Jayarajan C N

Post a Comment