Header Ads



ஜனாதிபதியைக் கூட விட்டு வைக்காது கிண்டலடிக்கின்றனர்


சமூக வலைத்தளங்கள் ஊடாக தான் கேலி செய்யப்படுவதாக கைத்தொழில் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க வேதனைப்பட்டுள்ளார்.


இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஆளுங்கட்சியின் அரசியல்வாதிகள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக கிண்டலடிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.


அதிலும் குறிப்பாக நான் உட்பட ஆளுங்கட்சியின் 15 பேர் சமூக வலைத்தளங்களில் கூடுதலான அளவில் கிண்டலுக்கு ஆளாகின்றோம்.


நானும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலியும் சமூக வலைத்தளங்களில் கூடுதலான பங்களிப்பை கொண்டிருப்பதால் எங்களை அதிகளவில் இலக்கு வைக்கின்றார்கள்.


அண்மைக்காலமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைக்கூட விட்டு வைக்காது கிண்டலடிக்கத் தொடங்கியுள்ளார்கள்.


ஆனாலும் எல்லாவற்றுக்கும் பதிலளித்துக் கொண்டிருக்க எங்களுக்கோ, அரசாங்கத்துக்கோ நேரமில்லை என்றும் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.