மாலைதீவு ஜனாதிபதி படைத்த புதிய உலக சாதனை
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு வரலாற்றில் மிக நீண்ட ஊடகவியலாளர் சந்திப்பிற்கான புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.
உலக பத்திரிகை சுதந்திர தினத்திற்காக சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் அமர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி 15 மணிநேரம் நீடித்தது, சுமார் 14 மணி நேரம் 54 நிமிடங்களுக்குப் பிறகு முடிந்தது. நிகழ்வின் போது தொழுகைக்காக ஜனாதிபதி முய்சு சிறிது நேரம் மட்டுமே ஊடக அமர்வை நிறுத்தினார்.
இது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
Post a Comment