பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீர், பீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்வு
இந்தியாவுடனான அண்மைய இராணுவ மோதலுக்குப் பிறகு, தாம் வெற்றியீட்டியதாக பாகிஸ்தானில் வெற்றிக் கொண்டாட்டங்களும் நடைபெற்ற நிலையில், அந்நாட்டின் இராணுவத் தளபதியாக செயற்பட்ட அசிம் முனீர், பீல்ட் மார்ஷல் பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானில் ஒருவர் இப்பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளமை, இதுவே முதன்முறையாகும் எனவும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Post a Comment