பெரும் சட்டத்தரணிகளுடன் வந்த 'டீச்சர் அம்மா'
- இஸ்மதுல் றஹுமான் -
"டீச்சர் அம்மா" ஹயேசிக்கா உட்பட ஐந்து சந்தேக நபர்களும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சைக்காக பிரத்தியேக வகுப்பு நடாத்தும் பிரபல டியூஷன் ஆசிரியையான "டீச்சர் அம்மா" என அழைக்கப்படும் ஹயேசிக்கா பிரனாந்து , அவரது கணவர் பிரமித் சுரேந்திர, முகாமையாளர் சானக்க விஸ்வஜித் ஆகியோர் அவர்களு கல்வி நிலையத்தில் கடமையாற்றும் கிபுளபிட்டியவைச் சேர்ந்த கிஷால் அகலவத்தவை மனிதாபிமானம் இல்லாமல் தகாத முறையில் தாக்கியது தொடர்பான வழக்கு இன்று 14 ம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி சுதர்ஷிமா பிரேமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அன்றயதினம் தலைமறைவாக இருந்த ஹயேசிக்கா நீதிமன்றில் முன்னிலையானார். ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவரத கணவரும், முகிமையாளரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டதரணிகளான காலிங்க இந்திரதிஸ்ஸ, அனுஷ பிரேமரத்ன ஆகியோர் பத்துக்கும் மேற்பட்ட சட்டதரணிகளுடன் முன்னிலையாகி இந்த சம்பவம் இணக்க சபைக்கு கொண்டு செல்ல வேண்டிய வழக்கு, பொலிஸார் உரிய முறையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, பி அறிக்கை சமர்பித்திருக்கவில்லை, இரண்டு முறைப்பாடுகள் கிடைத்த போதும் பின்னர் கிடைத்த முறைப்பாட்டையே விசாரித்துள்ளனர். மற்றைய முறைப்பாடு விசாரிக்கப்படவில்லை என வாதிட்டனர். விசாரணையின் போது வீடியோ படம் எடுத்ததாக கூறப்படும் திலான்,மலீஷ ஆகியோர் 4ம், 5ம் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டனர்.
முறைப்பாட்டாளர் சார்பில் சிரேஷ்ட சட்டதரணி நெல்சன் குமாரநாயக்க பல சட்டதரணிகளுடன் ஆஜரானார்.
நீண்ட நேர வாதப் பிரதிவாதங்களை செவிமடுத்த மேலதிக நீதிபதி சுதர்ஷிமா பிரேமரத்ன சந்தேக நபர்கள் ஐவரையும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவித்தனர்.
வழக்கை செப்டம்பர் மாதம் 17ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அன்றயதினம் பூரண அறிக்கையை சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
Post a Comment