இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழுவினர் புறப்பட்டுச் சென்றார்கள்
இந் நிகழ்வில் சவுதி அரேபியாவின் துாதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்த்தானி கலந்து கொண்டார் அவருடன் மேல்மாகாண ஆளுநர் ஹனீப்
பிரதியமைச்சர் முனீர் முளாஃபர் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் எம்.வை.எம்..நவவி, முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ். ஹஜ் கமிட்டியின் தலைவர் றியாஸ் மிஹ்லார் ஹஜ் முகவர் றிஸ்மி ரியால் மற்றும் எம.ரீ. கரீம் உட்பட துபாய் அரப் ஏயார் விமான முகாமையாளர்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் எம்.எம்.எம் முப்பி மற்றும் கே.ஏ சப்றி உட்பட பலரும்கலந்து கொண்டனர்
மற்றும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் பணிப்பாளர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சவுதி அரேபியாவின் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி கருத்துத் தெரிவிக்கையில்,
இம்முறை ஹாஜிகளுக்கு சகல வசதிகளும் சவுதி அரேபியாவில் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது இலங்கையிலிருந்து 3500 க்கும் மேற்பட்ட ஹாஜிகள் இம்முறை ஹஜ்ஜுக்குச் செல்வதாகவும் தெரிவித்தார்.
(அஷ்ரப் ஏ சமத்)
Post a Comment