இங்கிலாந்தின் பள்ளிக் கல்வித்துறைத் தலைமைப் பொறுப்புக்கு முதல் முறையாக இஸ்லாமிய அறிஞர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹாமித் பட்டேலின் மூதாதையர் குஜராத் மாநிலம் பரூச்சைச் சேர்ந்தவர்கள். தொழில் நிமித்தமாக 1970இல் இங்கிலாந்தில் குடியேறிய வர்கள். தனது 16ஆவது வயதில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் மார்க்கக் கல்வி தேர்ச்சி பெற்று முஃப்தி ஹாமித் பட்டேல் இஸ்லாமிய மார்க்க அறிஞராகச் செயலாற்றி வருபவர்.
இங்கிலாந்தில் ஐந்து கல்வி நிறுவனங்களை நடத்தி வந்த 'தவ்ஹீதுல் கல்வி அறக்கட்டளை' இயக்குநராக 2019இல் பொறுப்பேற்ற ஹாமித் பட்டேல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்து முழுவதும் தவ்ஹீதுல் அறக் கட்டளையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை 34 ஆக உயர்த்தியதோடு ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை இஸ்லாமியப் பாடத் திட்டத்தை வடிவமைத்தவர்.
இங்கிலாந்து நாட்டின் பொதுக்கல்வி அமைப்புக்களிலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகள் வகித்து வரும் ஹாமித் பட்டேல் பர்மிங்காம் பல்கலையில் கௌரவப் பேராசிரி யராகவும் பணியாற்றி வருகிறார். இங்கிலாந்து நாட்டின் Office For Standards in Education தலைமைப் பொறுப்புக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்விப்புலம் சார்ந்த இவரது பங்களிப்புக்காக 2015இல் சர் பட்டமும், 2021இல் இங்கிலாந்து ராணி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குளச்சல் ஆசிம்
(சமரசம்)
Post a Comment