Header Ads



காத்தான்குடியில் தீ விபத்து


காத்தான்குடியில் தீ விபத்து காத்தான்குடி நகரில் இன்று (31) பல்பொருள் அங்காடி வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டது. தீ பரவல் காரணமாக வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. 


இதனால் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையினர் காத்தான்குடி நகரசபை தீயணைப்பு படையினர் குறித்த இடத்திற்கு வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதும் வர்த்தக நிலையம் முற்றாக எறிந்து சாம்பலாகியுள்ளது . 


அங்கிருந்து பொருட்கள் பொலிசார் மற்றும் தொண்டர்களினால் ஓரளவு காப்பாற்றப்பட்டுள்ளன. இது இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


- ஜவ்பர்கான் -


No comments

Powered by Blogger.