2 இஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை சுட்டுகொன்ற (Elias Rodriguez) யார்..?
அமெரிக்காவில் இரண்டு இஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை சுட்டு கொன்றதிற்காக கைது செய்யப்பட்டுள்ளார் (Elias Rodriguez) எலியாஸ் ரோட்ரிக்ஸ்.
தி ஹிஸ்டரிமேக்கர்ஸில் வரலாற்று ஆராய்ச்சியாளராக உள்ளார், அவர் முக்கிய ஆப்பிரிக்க அமெரிக்கத் தலைவர்களின் விரிவான வாழ்க்கை வரலாறுகளை உருவாக்கும் ஆராய்ச்சியாளராம்.
அவர் இல்லினாய்ஸின் சிகாகோவில் பிறந்து வளர்ந்தார், மேலும் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.
2023 இல் தி ஹிஸ்டரிமேக்கர்ஸில் சேருவதற்கு முன்பு, அவர் தேசிய மற்றும் பிராந்திய அளவில் வணிக தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எழுத்தாளராகப் பணியாற்றி இருக்கிறாராம்.
புனைகதை படிப்பதிலும் எழுதுவதிலும், நேரடி இசை, திரைப்படம் மற்றும் புதிய இடங்களை ஆராய்வதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம் என்கின்றன பத்திரிக்கைகள் சிகாகோவின் அவொண்டேல் சுற்றுப்புறத்தில் வசிக்கிறார்.
வழக்கமான கான்செப்ட் தான் சுடும்போது பாலஸ்தீன தனிநாடு வாழ்க எனச் சத்தமிட்டு சுட்டார்
போகப் போக உண்மை தெரியும்.
-ஹைதர் அலி-
Post a Comment