Header Ads



இந்திய வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பதவி விலகிய முஸ்லிம் ஐபிஎஸ் அதிகாரி


மிகச் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கத்தை இருமுறை வென்ற ஐபிஎஸ் அதிகாரி நூருல் ஹுதா வக்ஃப் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


 பீகார் மாநிலம் சீதாமஹியைச் சேர்ந்தவரும், 1995ஆம் ஆண்டு பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரியுமான நூருல் ஹுதா தன்பாத், அசானோல், டெல்லி ஆகிய ரயில்வே பிரிவுகளில் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக அவருக்கு இருமுறை குடியரசுத் தலைவரின் விசிஷ்ட சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறைத் தலைவரின் டிஜி சக்ரா விருதையும் இருமுறை பெற்றுள்ளார். 


சீதாமஹியில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள 300 மாணவர்களுக்கு நூருல் ஹுதா இலவசக் கல்வி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விகாஷீல் இன்சான் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார்.


S. Ali


www.jaffnamuslim.com

No comments

Powered by Blogger.