Header Ads



முஸ்லிம் கர்ப்பிணிக்கு மதவெறிபிடித்த, மகப்பேறு மருத்துவர் புரிந்த கொடூரச் செயல்


கொல்கத்தா: முஸ்லிம் என்பதால் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மகப்பேறு மருத்துவர்! மனிதத்தை முற்றிலும் இழந்த தருணம்!


இது குறித்து பாதிக்கப்பட்ட நபரின் நெருங்கிய உறவினரின் பதிவு


"கஸ்தூரி தாஸ் நினைவு சிறப்பு மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் நிபுணர் டாக்டர் சி. கே. சர்க்காரின் ஏற்றுக்கொள்ளத்தகாத நடத்தை"


இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் ஆழ்ந்த மனத்துயரையும் வேதனையையும் அடைகிறோம். கடந்த ஏழு மாதங்களாக டாக்டர் சி. கே. சர்க்காரின் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்த எனது கர்ப்பிணி மைத்துனி, நாங்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக சிகிச்சை அளிக்க டாக்டர் சி. கே. சர்க்கார் திட்டவட்டமாக மறுத்தது கண்டு பேரதிர்ச்சியும் கொந்தளிப்பும் அடைந்தார்.


டாக்டர் சி. கே. சர்க்கார் கூறியதாவது: "கஷ்மீர் சம்பவத்திற்குப் பிறகு, நான் எந்த முஸ்லிம் நோயாளியையும் இனி பரிசோதிக்கப் போவதில்லை. இந்துக்கள் உங்கள் கணவரை கொலை செய்ய வேண்டும், அப்போதுதான் அவர்கள் அடைந்த வேதனையை நீங்கள் உணர முடியும். மேலும் நாம் அனைத்து முஸ்லிம்களையும் ஒதுக்க வேண்டும்" என்றார்.


 இந்த வெளிப்படையான பாரபட்சமான செயல்பாடு அறமற்றதும், மனிதாபிமானமற்றதும் மட்டுமல்லாமல், மருத்துவ நெறிமுறைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளின் அப்பட்டமான மீறலாகும். இந்த வெறுப்புணர்வும் பாரபட்சமும் நிறைந்த கருத்து எனது மைத்துனியின் மனதை ஆழமாகப் புண்படுத்தியுள்ளது. அவர் அப்போதிருந்து கண்ணீர் வடிக்கிறார், மிகுந்த மன உளைச்சலுடனும், தனக்காக மட்டுமல்லாமல், அவரது கருவில் வளரும் உயிருக்காகவும் அச்சத்தில் உறைந்து போயுள்ளார். ஆதரவும், கருணையும், அக்கறையும் அவருக்கு மிகவும் தேவைப்பட்ட இத்தகைய தருணத்தில், அவர் வெளிப்படையான தப்பெண்ணத்தையும் கொடுமையையும் எதிர்கொண்டது மிகுந்த வேதனையளிக்கிறது.


இது வெறுமனே நெறிமுறை மீறல் அல்ல – இது மனிதாபிமானமற்ற செயல்.]


சுகாதாரப் பாதுகாப்பு என்பது ஒரு அடிப்படை உரிமை; அது மதத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சிறப்புச் சலுகை அல்ல. இத்தகைய பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் கடுமையான பொறுப்புக்கூறலையும் உடனடி நடவடிக்கையையும் வலியுறுத்துகிறோம்.


மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டிய இந்த கர்ப்ப கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு சிகிச்சையை மறுப்பது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சுகாதார நிபுணர்கள் தங்கள் மருத்துவ உறுதிமொழியால் கட்டுப்பட்டவர்கள்; அவர்கள் மதம், சாதி அல்லது பின்புலம் பாராமல் அனைத்து நோயாளிகளையும் சமமாக நடத்த வேண்டும்.


மருத்துவத்துறை அதிகாரிகள், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். யாரும் தங்களது மிகவும் பலவீனமான தருணத்தில் இத்தகைய பாகுபாட்டை சந்திக்க நேரிடக்கூடாது.


இந்த பதிவை அனைவரும் பகிருமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்!

No comments

Powered by Blogger.