Header Ads



நிதியியல் அறிக்கைகள், ஜனாதிபதியிடம் கையளிப்பு


2024 மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள்  மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு


இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள்  மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.


அறிக்கையின் பிரதியொன்றை மத்திய வங்கியின் ஆளுநர்  கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடமும் கையளிக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.