Header Ads



எதிர்க்கட்சியினரே அதிகம் பொய் சொல்கின்றனர் - டில்வின் சில்வா


எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழு, நாட்டில் அதிகாரத்தைப் பெறுவதற்காக இந்த நாட்டின் வாக்காளர்களிடம் அதிகம் பொய் சொல்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.


தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில்  நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.


இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைப் பெறுவதற்காக பொய் சொல்லவில்லை என்றும், தற்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும் கூறினார்.


உள்ளூராட்சி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்திய திருடர்கள் மற்றும் ஊழல்வாதிகள் புதிய கட்சிகளின் போர்வையில் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


இந்தக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட எம்.பி. மஞ்சுள சுரவீர ஆராச்சி, எம்.பி. கிருஷ்ணன்கலைச்செல்வி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.