Header Ads



மூன்றரை கோடி ரூபாய் பணம், தங்க ஆபரணங்களுடன் கான்ஸ்டபிள் கைது


தெவுந்தர - ஹும்மன வீதியில் மூன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க வளையல்கள், காதணிகள் உட்பட 150 கிராம் தங்கம் என்பவற்றுடன் மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுத் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மேலும் ஐவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர். 


சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் போது வாகனத்தின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.


தெவுந்தர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள், ஹும்மான வீதியில் வேகமாகச் சென்ற வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.


இந்த சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய ஐந்து பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் பணம் மற்றும் தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டனர்.


மேல் மாகாண புலனாய்வுத் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காரை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


விசாரணையின் போது பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணத்தை பகிர இவர்கள் எடுத்துச் சென்றார்களா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

No comments

Powered by Blogger.