Header Ads



ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானை தொடர்புபடுத்தும் தகவல்கள் கண்டுபிடிப்பு - பாராளுமன்றத்தில் அமைச்சர் அறிவிப்பு


2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புபடுத்தும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று -10- பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


"சமீபத்தில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் அவரைத் தொடர்புபடுத்தும் கணிசமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


எந்தவொரு குற்றத்தையும் மறைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், எந்தவொரு குற்றவாளியும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க மாட்டோம். நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது கட்டாயமாகும். நீதி வெல்ல வேண்டும், இதை அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்று அமைச்சர் விஜேபால கூறினார்.



No comments

Powered by Blogger.