Header Ads



அடுத்த ஜனாதிபதி UNP யிலிருந்தே தெரிவு, வருட இறுதியில் மீண்டும் கடும் பொருளாதார நெருக்கடி


ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணையாவிட்டாலும் பத்தாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 


அது ஜனநாயக ரீதியாகவோ, அரசமைப்பு ரீதியாகவோ அல்லது பொருளாதார நெருக்கடியின் மூலமாகவோ இடம்பெறலாம், இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என அவர் கூறியுள்ளார்.


ஐ.தே.கவின் மகளிர் தின நிகழ்வு  இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


எம்மில் இருந்து பிரிந்து சென்று அதிக ஆசனங்களைக் கொண்டிருந்தவர்களால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் அது முடியாமல் போனது. அவர்களுடன் ஒன்றிணையாவிட்டாலும் 10ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியையும் ஐ.தே.க.வே உருவாக்கும். அது ஜனநாயக ரீதியிலோ, அரசமைப்பு ரீதியிலோ அல்லது பொருளாதார நெருக்கடியிலோ இடம்பெறலாம்.


நான் அறிந்த வகையில் இந்த வருடத்தின் இறுதியில் நாட்டில் மீண்டும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். ஜே.வி.பி. கூறும் 77 ஆண்டு சாபத்தில் தேங்காய் 80 ரூபாவாகும். உப்பு பைக்கட் 100 ரூபா மாத்திரமே. ஆனால், இன்று தேங்காய் 230 ரூபா, உப்பு 280 ரூபா. 1977இல் ஜே.ஆர்.ஜயவர்தன அனைவருக்கும் மோட்டார் சைக்கிள் மற்றும் ஓட்டோ யுகத்தைத் தோற்றுவித்தார்.


ஆனால், இன்று ஓட்டோவின் விலை 20 இலட்சம் ரூபாவாகும். பாரதூரமான அவல நிலையை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.