Header Ads



இப்தாரில் பங்கேற்ற அமைச்சர்


நாடு எனும் ரீதியில் முன்னேறிச் செல்ல வேண்டுமாயின் பேதங்களை மறந்து அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான, வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


கலாச்சார நிகழ்வுகள் இனங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த வழிவகுப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டே அவர் இதனை தெரிவித்தார்.


செய்தி ஒன்றின் நம்பகத்தன்மையினை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஊடகவியலாளர்களை சாரும் என்று நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார். முஸ்லிம்களின் புனித வேத நூலான அல்குர்ஆனிலும் இது வழியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.


இந்த நிகழ்வானது, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார அவர்களின் பூரண வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில்  பல முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


முஸ்லிம் எய்ட் நிறுவனமும் கின்னியாவில் இயங்கும் குளோபல் எஹ்ஸான் ரிலீப் நிறுவனமும் இந்நிகழ்விற்கு அனுசரணை வழங்கி இருந்தனர்.


(அஸ்ரப் ஏ சமத்) 



No comments

Powered by Blogger.