Header Ads



மதுபான போத்தல்களுடன் சென்ற கொள்கலன் விபத்து - குவிந்த மக்கள், அள்ளிச்சென்றனர்


கொழும்பு- இரத்னபுரி பிரதான வீதியில் எஹெலியகொட பகுதியில் மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதனால், குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


வளைவு ஒன்றில் வேகமாக சென்ற போது கொள்கலன் லொறி கவிழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், ஏராளமான மதுபான போத்தல்கள் சாலையில் விழுந்து நொறுங்கியுள்ளன. 


இதன் காரணமாக, தற்போது அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.