Header Ads



தேசப்பந்துவை பிடிக்க உதவுமாறு, மக்களை வலியுறுத்தியுள்ள பொலிஸ் திணைக்களம்


முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி.) தேசபந்து தென்னகோன் இருக்கும் இடம் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி) தெரிவிக்குமாறு பொதுமக்களை பொலிஸ் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. 


இன்று வியாழக்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


 மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, தேசபந்து தென்னகோனை காணவில்லை. அவர் தலைமறைவாகியுள்ளார். எனவே, அவர் இருக்கும் இடம் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால்,  குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி) பொதுமக்கள்  தெரிவிக்கவும். 


நிலுவையில் உள்ள பிடியாணை இருந்தபோதிலும், முன்னாள் ஐஜிபி கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு உதவிய எந்தவொரு நபரும் தண்டனைச் சட்டத்தின் 209ஆவது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.


தேசபந்து தென்னகோன் ஐஜிபியாக இருந்ததால் அவருக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படாது என்றும், மற்ற சந்தேக நபர்களைப் போலவே நடத்தப்படுவார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதியளித்துள்ளா

No comments

Powered by Blogger.