Header Ads



முதியோர் இல்லத்திலிருந்த 83 வயது பெண் கைது


கொள்ளுப்பிட்டியில் மற்றொரு நபருக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 50 மில்லியன் ரூபாய்க்கு விற்றதற்காக 83 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி பாதையில் நிலத்தை விற்பனை செய்ததற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.


பொலிஸ்மா அதிபரிடம் (ஐ.ஜி.பி) பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த வழக்கு தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிக மோசடிப் பிரிவு, 2021 ஆம் ஆண்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்ப்பித்தது.


அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், பத்தரமுல்லையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் இருந்தபோது அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். 

No comments

Powered by Blogger.