37 வருடங்களாக நோன்பிருக்கும் பிரபாகரன் சேட்டன்
இந்தியா - மலப்புறம் மாவட்டம் வாளாஞ்சேரி சேர்ந்தவர் பிரபாகரன் சேட்டன். 37 வருடங்கள் முன்பு தனது கல்லூரி நண்பர் முகமது முஸ்தபாவுடன் சேர்ந்து ரமலான் மாதம் பத்து தினங்கள் நோன்பிருந்த போது உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட்ட ஆத்ம திருப்தி அடுத்தடுத்த ஆண்டுகளில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருக்க தூண்டியது.
திருமணத்திற்கு பிறகும் பிரபாகரன் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருக்க அவரின் மனைவியும் உதவுவதோடு சில ஆண்டுகளாக அவரும் சில தினங்கள் கணவருடன் நோன்பிருந்து வருபவர்.
பிரபாகரன் சேட்டனின் ரமலான் மாத நல்லிணக்க நிகழ்வாக ஆண்டு தோறும் ஒரு தினம் தனது வீட்டில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தவும் தவறுவதில்லை.
அரசியல் நண்பர்கள், பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகள், தனது நெருங்கிய உறவினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்தாண்டுக்கான இஃப்தார் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மக்ரிப் பாங்கொலி கேட்டவுடன் அவரின் மனைவி வீட்டின் வராந்தாவில் உள்ள குத்துவிளக்கில் திரி கொளுத்தும் போது வீட்டின் மற்றொரு பகுதியில் வந்திருக்கும் முஸ்லிம் நண்பர்கள் மக்ரிப் தொழுகை நடத்த தனியிடம் ஒதுக்கி தரும் நல்லுள்ளம் பிரபாகரன்.
நேற்றைய நிகழ்வில் முஸ்லிம் லீக் இளைஞர் பிரிவு தலைவர் பாணக்காடு முனவ்வரலி ஷிகாப் தங்கள் இமாமாக நின்று மக்ரிப் தொழுகையை நிறைவேற்றினர்.
37வருடங்களாக தொடரும் இந்த நிகழ்ச்சி தனது மரணம் வரை தொடர்ந்து நடக்கும் என்று கூறும் பிரபாகரன் மலப்புறம் மாவட்டமனித நல்லிணக்கத்தின் தூதுவர்.
Post a Comment