Header Ads



மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பச்சை மிளகாய்


கறி மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை கிலோ ரூபா1,400 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் பச்சை மிளகாய் நேற்று (06) ஒரு கிலோ ரூபா 1,000 ரூபா முதல் 1,100 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.


கடந்த சில மாதங்களாக கறி மிளகாய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததாலும், மழைக்காலத்துடன் பச்சை மிளகாய் விலையும் அதிகரித்துள்ளது.


எனினும், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு குறைந்த அளவே மிளகாய் விநியோகிக்கப்படுவதால் விலையேற்றம் அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.


கறி மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர ஏனைய காய்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.


சமீபத்தில், கரட் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை குறைக்கப்பட்டது, தற்போது கரட்டின் மொத்த விலை கிலோ ரூ.400 ஆக உயர்ந்துள்ளது.


எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் என பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.