Header Ads



அமெரிக்க தீர்மானத்தினால், இலங்கைக்கு மிகவும் நன்மை..


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மானம், இலங்கைக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.


இந்த மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில், இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


"ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றங்களை சுமத்துவதும், கலப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கான திட்டங்களைத் தொடங்குவதும் அமெரிக்காதான். மேற்கத்திய நாடுகள் இதற்கு ஆதரவு அளிக்கின்றன. அமெரிக்கா இதிலிருந்து விலகிக் கொண்டால் நமக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. நமது எதிர்கால மனித உரிமைகள் திட்டத்திற்கு இது நல்லதொரு ஆரம்பமாகும். தேசிய திட்டத்தை நாமே சொந்தமாக முன்வைக்க முடியும். இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் ஆதரவு கிடைத்தால், இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்தை முறியடிக்க முடியும்."

No comments

Powered by Blogger.