Header Ads



சஞ்சீவ படுகொலை - நீர்கொழும்பு பொலிஸ் நிலைய அதிகாரி கைது


கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 25 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்வதற்கு சட்டத்தரணி வேடத்தில் சென்ற பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகளை பேணி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இது தொடர்பில் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  Vi

No comments

Powered by Blogger.