ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வந்தது ஏன்..?
தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் மூன்று நாள் விஜயமாக இன்று திங்கட்கிழமை (3) மீண்டும் நாட்டை வந்தடைந்தார்.
அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் முன்னெடுக்கவுள்ள விசேட வேலை திட்டம் குறித்து சூட்சுமமாக தெரிவித்த அவர் அது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
இதற்கு முன்னர் தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தை நினை நினைவு கூர்ந்து இனிமையான தருணங்களைப் பகிர்ந்து கொண்டார். இலங்கையின் அழகை போற்றியுள்ளார்.
இன்றைய தினம் காலை மும்பையிலிருந்து UL-148 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வந்தடைந்த ஜோன்டி ரோட்ஸூக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Post a Comment