இது நரகத்தின் கதவுகளைத் திறக்கும் நேரம், எந்த தடையும் இல்லாமல மிருகத்தனமான சக்தியைப் பயன்படுத்த இஸ்ரேலிய அமைச்சர் அழைப்பு
இஸ்ரேலிய கைதிகள் சனிக்கிழமைக்குள் விடுவிக்கப்படாவிட்டால் காசா மீது "நரகத்தை கட்டவிழ்த்து விடுங்கள்" என்ற ட்ரம்பின் அழைப்பை இஸ்ரேலின் தகவல் தொடர்பு அமைச்சர் ஆதரித்துள்ளார்.
"ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரைத்தபடி பதில் சரியாக இருக்க வேண்டும்" என்று X இல் ஒரு இடுகையில் தகவல் தொடர்பு அமைச்சர் ஷ்லோமோ கர்ஹி கூறினார்.
"மனிதாபிமான உதவிகளை முற்றிலுமாக நிறுத்துங்கள், மின்சாரம், தண்ணீர் மற்றும் தகவல் தொடர்புகளை துண்டித்து, பணயக்கைதிகள் திரும்பும் வரை மிருகத்தனமான சக்தியைப் பயன்படுத்துங்கள்.
எந்த தடையும் இல்லாமல் எங்கள் வீரமிக்க போராளிகளுக்கு இது ஹமாஸ் மீது நரகத்தின் கதவுகளைத் திறக்கும் நேரம் என்றான்

Post a Comment