இலங்கை கால்பந்துடன் கைகோர்த்த ஸ்கை மார்கட் ட்ரவல்ஸ்
இதன் முதற்கட்டமாக தற்போது இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தின் (Srilanka School Football Association) ஏற்பாட்டில் இடம்பெறும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதின்கீழ் பிரிவு ஒன்று சுற்றுத் தொடருக்கான அனுசரணையாளர்களாக ஸ்கை மார்கட் ட்ரவல்ஸ் தனியார் நிறுவனம் இணைந்துகொண்டுள்ளது.
இலங்கையின் 20 பிரபல பாடசாலை அணிகள் மோதும் இந்த தொடரானது, தேசிய மட்டத்தில் இளம் வீரர்கள் தமது திறமையை அடையாளம் காட்டும் ஒரேயொரு பிரதான மற்றும் முன்னணி தொடராக கடந்த பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையிலேயே இலங்கை கால்பந்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு அங்கமாக, ஸ்கை மார்கட் ட்ரவல்ஸ் தனியார் நிறுவனம் முதல் முறையாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளம் மற்றும் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கங்களுடன் பங்காளராகியுள்ளது. இந்த அனுசரணை வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு அண்மையில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், பயிற்சியாளர் கற்கைகள் துறையின் பொருப்பாளரும் முன்னாள் தேசிய அணியின் தலைவருமான சம்பத் பெரேரா, எலைட் யூத் முகாமையாளர் டட்லி ஸ்டெய்ன்வோல், பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்கை மார்கட் ட்ரவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (Managing Director) மொஹமட் பரூஸ், நீர்கொழும்பு போறதொட்ட சொக்கர் பேன்ஸ் தலைவர் றிஸ்வான் மற்றும் அதன் முகாமையாளர் நுப்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதின்கீழ் பிரிவு ஒன்று சுற்றுத் தொடருக்கு இம்முறை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் பிரதான அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment