விஞ்ஞானிகள் வாய்பிளக்கும் இடம்...!
முன்பொரு காலம் பூமி மட்டும்தான் மொத்த பிரபஞ்சம் என மனிதன் நம்பி வந்தான். சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் அதைச் சுற்றி வரும் வெறும் விளக்குகள்தான் என்றும் மனிதன் நம்பி வந்தான்.
அதன் பிறகு சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தான். அதிலே வேறு கோல்களும் உள்ளன என்பதையும் இவைகள் அனைத்தும் சூரியன் என்ற மாபெரும் கிரகத்தை சுற்றி வருகின்றன என்பதை கண்டுபிடித்தான்.
பின்னர், இந்த மாபெரும் சூரிய குடும்பம் கூட பால்வெளி எனும் மாபெரும் கோல் மண்டல சுற்றுப்பாதையில் உள்ள பல பில்லியன் கணக்கான விண்மீன் திரள்களில் ஒரு சிறிய திரள் மட்டுமே என்பதை கண்டுபிடித்தான்.
பின்னர் நவீன தொழில்நுட்பத்தின் துணையோடு விண்ணில் தேடல் வேட்டையை ஆரம்பித்தான். தேடத் தேட வியக்க வைக்கும் ஆகாயத்தை கண்டறிய 'ஹப்பிள்' எனும் வானவியல் தொலைநோக்கியை உருவாக்கினான்.
அது பிடித்துத் தந்த படங்களை வைத்து நமது பால்வெளியானது, திரள் திரளான வீண்மீன்களைக்கொண்ட பில்லியன் கணக்கான பால்வெளிகளில் இது ஒரு அற்பமான ஒரு பால்வெளிதான் என்பது தெரியவந்தது.
ஆர்வம் மேலிட்ட மனிதன் ஆகாயத்தின் உச்சியை கண்டுவிட்டதாக தம்பட்டம் அடிக்க ஆரம்பித்தான். விஞ்ஞானமே மிகப் பெரும் ஞானமென நினைக்க ஆரம்பித்தான்.
"ஜேம்ஸ் வெப்" என்ற ராட்சத தொலைநோக்கியை கண்டுபிடித்து விண்ணுக்கு அனுப்பினான்.
ஆனால் அவன் தேடத்த தேட அதிர்ச்சியும் ஆச்சரியமுமே அவனுக்கு காத்திருந்தது.
உச்சம் காண முடியாத பேரண்டங்கள், எல்லைகளற்ற அகிலங்கள், ஒளி வேகத்தில் விரிந்து செல்லும் ஆகாயம், கற்பனைக்கு எட்டாத விண்ணுலகம்.
போகப் போக மனிதன் சின்னவனானான்.
தான்தான் மிகப் பெரியவன் என்று நினைத்த மனிதனுக்கு மிக மிகப் பெரிய ஒரு பேறாற்றல் இருப்பதை விண்ணுலக ஆச்சரியங்கள் சொல்வது போல் இருந்தது.
இங்குதான் பேனாக்கள் எழுத மறுத்தன...!
விஞ்ஞானிகள் வாய்பிளக்க ஆரம்பித்தனர்...!
இப்போது இந்த வான் மறை வசனம் விடுக்கும் சவால் என்னவென்று பாருங்கள்!
((மனித, ஜின் வர்க்கமே! வானங்கள், பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் நீங்கள் கடந்து சென்று பாருங்கள்! பேராற்றால்(உதவி) இல்லாமல் உங்களால் கடக்கவே முடியாது.))

அல்குர்ஆன் : 55:33

தமிழாக்கம் / imran farook
Post a Comment