பல கனவுகளோடு இலங்கை வந்த, பெண் உயிரிழந்த நிகழ்வு
விடுமுறைக்காக இலங்கை வந்திருந்த நிலையில், உயிரிழந்த 24 வயதுடைய பிரித்தானியப் பெண் எபோனி மெக்கின்டோ, தெற்காசியா முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்ற தனது கனவின் ஒரு பகுதியாகவே இலங்கைக்கு சென்றதாக பீப்பிள் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
அவரது சகோதரியினால் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பொன்றின் தகவல்படி, இந்தியாவுக்கு சென்றிருந்த எபோனி மெக்கின்டோ, தெற்காசியாவின் முதல் பயணமாக இலங்கைக்கு சென்றிருந்தார் என்று குறிப்பிட்டுள்ளது.
நிதி திரட்டும் தளத்தில் சுமார் 10,000 பின்தொடர்பவர்களை எபோனி மெக்கின்டோ கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், இலங்கையின் விடுதியில் தங்கியிருந்தபோது, நோய்வாய்ப்பட்ட அவர், மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதேவேளை, குறித்த விடுதியில் தங்கியிருந்த மற்றுமொரு வெளிநாட்டவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment