Header Ads



இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்கும் உயர்பணியில் சவூதி அரேபியா


அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல பகுதியில் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தால் வலஸ்முல்ல தேசிய வைத்தியசாலையில் கடந்த 18 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை செயல்படுத்தப்பட்டு வரும் கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் தன்னார்வத் திட்டத்தை இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இன்று வியாழக்கிழமை (20) பார்வையிட்டார்.


இத்திட்டத்தினூடாக பல ஆயிரக்கணக்கான நோயாளர்களைப் பரிசோதித்தல், அவர்களுக்கு வைத்திய சேவைகளை வழங்குவதோடு தேவைப்படுமிடத்து அறுவை சிகிச்சைகளை  மேற்கொள்ளல், தேவையான மருந்துகளை வழங்குதல், வெண்படலங்களை அகற்றுதல், கண்ணீர் குழாய்களில் ஏற்படும் தடுப்புகளுக்கு சிகிச்சையளித்தல், நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை  மருந்து வகைகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றை வழங்குதல் என்பன இடம்பெறுகின்றன.


சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பான உறவுகளின் அடிப்படையிலும், உலகம் முழுவதிலும் உள்ள குறைந்த வருமானம் பெரும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்க சவூதி அரேபியா அரசு மேற்கொள்ளும் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையில் இந்த தன்னார்வத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 


இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்புமிக்க உறவுகளை அனைத்து துறைகளிலும் அதிக அளவில் வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. 






No comments

Powered by Blogger.