Header Ads



திடீரென நிறம் மாறிய தண்ணீர்


கடந்த மூன்று நாட்களாக யாழ்.மாநகர சபையினால் வழங்கப்பட்ட குடிநீரில் சிவப்பு மண் கலந்துள்ளதால் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் யாழ்.மாநகர சபை அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.


இந்த நீரை அருந்தவே முடியாது எனவும், ஏனைய சலவை நடவடிக்கைகளுக்கும், சமையலுக்குக் கூட இதனைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் யாழ்ப்பாண மக்கள் தெரிவிக்கின்றனர்.


யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் அமைப்பில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை சரிசெய்வதற்காக திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே இவ்வாறான நிலைமை யாழ்.மாநகர சபையின் மாநகர ஆணையாளர் குறிப்பிட்டார்.


பாதாள சாக்கடையில் செம்மண் குவிந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், இந்த நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறாயினும் மூன்று நாட்களாக யாழ்ப்பாண மக்கள் குடிநீரின்றி தவித்து வருவதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். R

No comments

Powered by Blogger.