மஹிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால்..?
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, நல்லாட்சி அரசாங்கத்தால் மகிந்த ராஜபக்சவுக்கு உரிய இல்லம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து வெளியேற விரும்பினால் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டால், மகிந்த ராஜபக்ச ஒரு கணம் கூட அங்கே தங்க மாட்டார் என்றும், அது குறித்து இங்கும் அங்கும் அறிக்கைகளை வெளியிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment