அமெரிக்காவும், இஸ்ரேலும் காசா மீது தாக்குதல் நடத்தினால்..??
யேமனின் ஹூதிகள், அமெரிக்காவும் இஸ்ரேலும் காசா மீது தாக்குதல் நடத்தினால் உடனடியாக இராணுவ நடவடிக்கை எடுப்பார்கள் என்று அந்த அமைப்பின் தலைவர் அப்தெல்-மாலிக் அல்-ஹூதி தெரிவித்தார்.
காசாவில் போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதை ஹூதிகள் கண்காணிப்பார்கள் என்றும், "கொடுங்கோலன் ட்ரம்பின் அச்சுறுத்தலின் அடிப்படையில் அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களும் சனிக்கிழமை அல்லது அதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ காசா பகுதியைத் தாக்க முனைந்தால் உடனடியாக இராணுவ ரீதியாக நகர்வார்கள்" என்று அவர் தொலைக்காட்சி உரையில் கூறினார்.
"குற்றவாளி டிரம்ப் தனது அச்சுறுத்தலைச் செயல்படுத்தினால் [காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை இடமாற்றம் செய்ய] இராணுவத் தலையீட்டிற்குத் தயாராக இருக்கும்படி [ஹவுத்தி] ஆயுதப் படைகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

Post a Comment