Header Ads



பிரதான கொலைச் சந்தேக நபர், சமிந்து டில்ஷான் என அடையாளம் காணப்பட்டார் - பாராளுமன்றத்தில் அமைச்சர் தெரிவிப்பு


கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.


இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேபால, சந்தேக நபர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் நேற்று மாலை புத்தளம் பாலவியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். "கடந்த இரண்டு வாரங்களில் பதிவாகிய பல கொலைகளில் இந்த சந்தேக நபர் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.


மைச்சர் விஜேபால, துப்பாக்கிதாரி சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி என அடையாளம் காணப்பட்டதாகவும், பின்னர் அவர் பல்வேறு மாற்றுப்பெயர்களை பயன்படுத்தியதாகவும் உறுதிப்படுத்தினார்.

No comments

Powered by Blogger.