Header Ads



இராணுவ கமாண்டோ படையணியின் முன்னாள் சிப்பாயே கொலைச் சந்தேக நபர்


புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், புத்தளம் - பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  


மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  வேன் ஒன்றில் தப்பிச் செல்லும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  


பொலிஸ் விசேட அதிரப்படையின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், இராணுவ கமாண்டோ படையணியின் முன்னாள் சிப்பாய் என தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.