Header Ads



விகாரையில் இணக்கசபையில் கைகலப்பு - ஒருவர் உயிரிழப்பு


மாத்தறை - திஹகொட பேதன்கஹவத்த விகாரையில் இடம்பெற்ற இணக்கசபை கூட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


முறைப்பாடொன்று தொடர்பான விசாரணைக்காக வந்திருந்த இருதரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியமையினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்போது காயமடைந்த 73 வயதான ஒருவர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

No comments

Powered by Blogger.