வாகன இறக்குமதி அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்ட ஜனாதிபதி
வாகன இறக்குமதி குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1969ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசாங்கங்களைப் போலல்லாமல், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் வாகனப் பேரணிகளில் இருக்க மாட்டார்கள் என்றும், அனைத்து அமைச்சர்களும் ஒரே ஒரு வாகனத்தை மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment