Header Ads



2 நாட்களே சிறையிலிருந்த யோஷித, பிணையில் விடுதலை

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


பெலியத்த பகுதியில் குற்றப்புலனாய்வு (சிஐடி) அதிகாரிகளால் ஜனவரி 25 ஆம் தழதி, யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​தலா ரூ. 50 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்கவால் பிணை  வழங்கப்பட்டது.


No comments

Powered by Blogger.