வழக்கை வாபஸ் பெறுகிறது SLMC
- Anzir -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி ஒருவரை, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், இணைத்துக் கொள்ளாமைக்கு எதிராக, இன்று -12- காலை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின், தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை, அக்கட்சி பிற்பகலில் அறிவித்தது.
அதில் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதியான நிசாம் காரியப்பரின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து முஸ்லிம் காங்கிரஸினால் தொடரப்பட்ட வழக்கை, அக்கட்சி நாளை வெள்ளிக்கிழமை, 13 ஆம் திகதி வாபஸ் பெறுமென அக்கட்சி மேல்மட்டம் JaffnaMuslim இணையத்திடம் தெரிவித்தன.

Post a Comment