Header Ads



ராஜினாமா செய்த சபாநாயகர் தெரிவித்துள்ள விசயங்கள்


சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த்துள்ளார்.


விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


குறித்த அறிக்கை பின்வருமாறு,


கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்த பிரச்சனை சமூகத்தில் எழுந்துள்ளது.


எனது கல்வித் தகுதி குறித்து தான் இதுவரை எவ்வித பொய்யான அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை.


ஆனால், கல்வித் தகுதியை உறுதிப்படுத்த தேவையான சில ஆவணங்கள் என்னிடம் இல்லாததாலும், அவற்றை உரிய நிறுவனங்களிடம் பெற வேண்டியதாலும், தற்போது அந்த ஆவணங்களை விரைவாகச் சமர்ப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


எனக்கு முனைவர் பட்டம் வழங்கிய ஜப்பானில் உள்ள வஷிதா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும், விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன்.


எவ்வாறாயினும், ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் மற்றும் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள  மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக நான் தற்போதைய சபாநாயகர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

No comments

Powered by Blogger.