Header Ads



மத்ரசா மாணவர்களை மீட்கப் போரடிய இராவணா அமைப்புக்கு பள்ளிவாசலில் கௌரவம்


மாளிகைக்காடு வாழ் பொதுமக்கள் சார்பில் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் கடந்த 2024 நவம்பர் 26 ம் திகதி முதல் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் மாவடிப்பள்ளி காரைதீவு பிரதேச வெள்ளத்தில் சிக்கிய உயிர்களை, காப்பாற்ற மீட்பு பணியில் ஈடுபட்டவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், விசேட துஆ பிராத்தனையும் ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமரின் நெறிப்படுத்தலில் பதில் தலைவர் ஏ.எம். ஜாஹீரின் தலைமையில் வெள்ளிக்கிழமை (06) ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இடம்பெற்றது. 


தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் மாவடிப்பள்ளி காரைதீவு பிரதேச வெள்ளத்தில் சிக்கிய உயிர்களை காப்பாற்ற மீட்பு பணியில் ஈடுபட்டு நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி ஐந்து மாணவர்களை உயிருடனும், நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி 06 மாணவர்கள் அடங்களாக 08 பேரின் ஜனாஸாக்களை மீட்கவும் இயற்கை சீற்றங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை சகித்துக் கொண்டு களப்பணி செய்த மட்டுப்படுத்தப்பட்ட கல்முனை ஆழ்கடல் சுழியோடிகள் நீரியல் வள மீனவர் கூட்டுறவு சங்கம், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு, சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை, காரைதீவு இராவணா அமைப்பு போன்றன இதன்போது கௌரவிக்கப்பட்டது. 


வெள்ளிக்கிழமை அனர்த்தம் மற்றும் சமூக சேவைகள் தொடர்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தியதுடன் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து விசேட துஆ பிரார்த்தனையை இப்பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலவி ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) நிகழ்த்தினார். இந்நிகழ்வில் கிராம நிலதாரி ஏ.எம். நஜீம், நம்பிக்கையளர் சபை ஆலோசகர் ஐ. இஸ்திகார், பொருளாளர் எம்.எப்.எம். றிபாஸ் உள்ளடங்களாக நம்பிக்கையளர் சபையினர்,  ஜமாஅத்தார் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.