Header Ads



சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கையா..?


சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் தொடர்பாக வெளிவரும் பல்வேறு கருத்துகள் தொடர்பில் இன்னும் சில நாட்களில் அறிக்கை வெளியிடுவார் என அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று -10- தெரிவித்தார்.


சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பான செய்திகள் உண்மையாக இருந்தால் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சபாநாயகரின் அறிக்கைக்குப் பின்னர் அது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.


“சபாநாயகர் தகுதிகள் குறித்து அறிக்கை வெளியிட்ட பிறகு பரிசீலிப்போம்.அறிக்கைகள் உண்மையாக இருந்தால் எடுக்க வேண்டிய முடிவையும், பொய்யாக இருந்தால் எடுக்க வேண்டிய முடிவையும் சொல்கிறேன் " என்றார்.


சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருவதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் தற்போதைய சபாநாயகரிடம் கலாநிதி பட்டம் இருப்பது உண்மையென்றால் அதனை நிரூபித்து காட்டுமாறு அண்மையில் சபாநாயகருக்கு சவால் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.