Header Ads



நாட்டில் இப்படியும், அசிங்கங்கள் நடைபெறுகிறது

 


வெளிநாட்டில் உள்ள ஒருவரின் காதலியை நண்பியாக்கி, வாட்ஸ்அப் தொழில்நுட்பத்தின் ஊடாக, நிர்வாண வீடியோவை அனுப்பி வைத்து தொடர்பினை வைத்திருந்தார் எனக் கூறப்படும் இளைஞனை தாக்கினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.


இந்த சம்பவம், கஹத்துடுவ ​பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.


 அவ்விளைஞனை கடத்திச் சென்று, அவரை நிர்வாணமாக்கி, மரண அச்சுறுத்தல் விடுத்து, பல சந்தர்ப்பங்களில் தாக்குதல்களை மேற்கொண்டு, 38 ஆயிரம் ரூபாய் மற்றும் அலைபேசியை கப்பமாகவும் பெற்றுக் கொண்டு உள்ளனர்.


 கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டில் உள்ள யுவதியின் காதலனும் அடங்குகிறார். கஹத்துடுவைச் சேர்ந்த 22,24 மற்றும் 28 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடத்திச் செல்லப்பட்ட இளைஞனை நிர்வாணமாக்கி, மரண அச்சுறுத்தல் கொடுத்து, பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடச் செய்து, அவற்றை வீடியோவாக பதிவு செய்து, அந்த இளைஞனின் அலைபேசியில் உள்ள அனைத்து வாட்ஸ்அப் இலக்கங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.


இது தொடர்பில் கண்டறிந்து கொண்ட பாதிக்கப்பட்ட இளைஞனின் தந்தை, பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். ​அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், ஆப்பிள் வகையைச் சேர்ந்த இரண்டு அலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.  

No comments

Powered by Blogger.