Header Ads



நல்லடக்கம் குறித்த சட்டமூலம் - அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது


உயிரிழந்த பின்னர், ஒவ்வொரு நபர்களின் உடலங்களையும் அகற்றுகின்ற விதம் தொடர்பாகத் தீர்மானிக்கின்ற உரிமையை குறித்த நபருக்கே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


 தனது உடலத்தை அகற்ற வேண்டிய விதம் பற்றிய விருப்பத்தைத் தெரிவிக்காதவர்கள் உயிரிழக்கின்ற போது, உயிரிழந்தவரின் அபிலாசைகள் மற்றும் மத ரீதியான, கலாச்சார அல்லது தனிப்பட்ட நம்பிக்கைகளைக் கருத்தில் கொண்டு உயிரிழந்தவரின்; உடலத்தை நல்லடக்கம் செய்ய வேண்டுமா அல்லது தகனஞ் செய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கின்ற உரிமை அந்நபரின் நெருங்கிய உறவினருக்கு ஒப்படைக்கின்ற வகையில் ஏற்பாடுகளை வகுப்பதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. 


குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

No comments

Powered by Blogger.