Header Ads



ஜம்இய்யதுல் உலமாவுக்கு ரணில் வழங்கிய, வாக்குறுதி பற்றி விமர்சனம்


எந்த பிரச்சினைக்காகவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவுக்குழு அமைப்பதாகத்  தெரிவித்தால், அந்த விடயத்தை இழுத்தடிப்பதற்கே  அந்த தெரிவுக்குழு அமைக்கப்படுகின்றது என்பதனை தெரிந்து கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. யான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில்   செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற  திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.  


கொரோனா  தொற்றில் மரணித்த முஸ்லிம்களின் சடலங்களை எரித்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதாக ஜனாதிபதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிடம் வாக்குறுதியளித்துள்ளார். .


ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றம் நாளை (இன்று 4ஆம் திகதி) மாத்திரமே கூடும் . அவ்வாறானால் பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஜனாதிபதி எப்போது அமைக்கப்போகிறார்?


  தெரிவுக்குழுக்களை அமைப்பதற்கு ரணில் விக்ரமசிங்க திறமைசாலி. ஏதாவது பிரச்சினை தலைதூக்கும்போது  அந்த பிரச்சினையை குறித்த குழுவுக்கு சாட்டிவிட்டு பிரச்சினையில் இருந்து ஒதுங்கி விடுவார்.  எந்த பிரச்சினைக்காகவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவுக்குழு அமைப்பதாகத்  தெரிவித்தால், அந்த விடயத்தை இழுத்தடிப்பதற்கே  அந்த தெரிவுக்குழு அமைக்கப்படுகின்றது என்பதனை தெரிந்து கொள்ள முடியும்   என்றார். 

No comments

Powered by Blogger.