Header Ads



வீதியில் சென்ற 15 வயது சிறுமி, கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோம்


மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் தனது அம்மம்மா வீட்டிற்கு சென்று தனிமையில் வீதியில் திரும்பிக் கொண்டிருந்த  15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்ட 26, 21 வயதுடைய இளைஞர்கள் இருவரை நேற்று (13) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.


குறித்த பிரதேசத்தைச் சோந்த 15 வயது சிறுமி கடந்த 7ம் திகதி தனது வீட்டில் இருந்து அம்மம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்து தனிமையில் திரும்பிக் கொண்டிருந்தபோது காட்டுப்பகுதியை அண்டிய பகுதியில் வைத்தி சிறுமியை இரு இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.


இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் நேற்று செய்த முறைப்பாட்டையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த 26, 21 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.


இதில் கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.




-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

No comments

Powered by Blogger.