Header Ads



லைலத்துல் கத்ர் இரவை பள்ளிவாயல்களின் 4 சுவர்களுக்குள் மட்டும் தேடிவிடாதீர்கள்..!!!💥


 🌿உறவுகளுடன் அன்பு  காட்டுவதில் தேடுங்கள்..!


 🌿ஏழைக்கு உணவு கொடுப்பதிலும், ஆடை இல்லாதவருக்கு ஆடை கொடுப்பதிலும் தேடுங்கள்..! 


🌿பயத்திலுள்ளவனுக்கு அபயம் கொடுப்பதிலும், அநீதியை நீக்குவதிலும் தேடுங்கள்..! 


🌿அநாதைகளை, விதவைகளை பராமரிப்பதிலும், நோயாளிக்கு உதவுவதிலும் தேடுங்கள்..! 


🌿ஏழைகளின் குடிசைகளிலும், வைத்தியசாலை கட்டிலில் உள்ளவர்களிலும் தேடுங்கள்..! 


🌿மிருகங்களோ, மரங்களோ தாகம் தீர்க்கும் பாத்திரங்களில் தேடுங்கள்..! 


🌿கூலித் தொழிலாளிக்கு இலகுபடுத்தி கொடுப்பதிலும், கடனாளியின் கடனை போக்குவதிலும் தேடுங்கள்..!  


🌿தேவையுடையவர்களின் முகங்களில் புன்னகை வரைவதில் தேடுங்கள்..!


 🌿புறத்தோற்ற அசைவுகளால் மட்டும் தேடாதீர்கள், உளக்குமுறல் களாலும் தேடுங்கள்..!


🌿உடல் பாகங்களை நிலை நிறுத்தி மட்டும் தேடாதீர்கள், ஆன்மாவை நிலை நிறுத்தியும் தேடுங்கள்..!


 💥அந்த "லைலத்துல் கத்ர்" இரவை பள்ளிவாயல்களில் தேடுவதற்கு முன் உங்கள் மனசாட்சிகளில் தேடுங்கள், கிடைக்கக்கூடும்..!!!💥


அஹ்மத்ஷா அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)

அரபு மூலத்தின் சில வரிகளிலிருந்து சில மாற்றங்களுடன்

No comments

Powered by Blogger.