Header Ads



இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 14 வருட சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்(Imran Khan) மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.


குறித்த உத்தரவை இன்று(01.04.2024) பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.


எனினும், ஏனைய வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்புகள் காரணமாக அவர்கள் இருவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


இம்ரான் கானுக்கும் புஷ்ரா பீபிக்கும் 14 வருட சிறைத்தண்டனை விதித்து இஸ்லாமாபாத் பொறுப்புடைமை நீதிமன்றம் ஜனவரி 31 ஆம் திகதி தீர்ப்பளித்தது. பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக இத்தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் இவர்கள் தலா 10 வருட காலம் அரச பதவிகளை வகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் இருவருக்கும் தலா 787 மில்லியன் பாகிஸ்தான் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.


மேலும்,  இந்த தீர்ப்புக்கு எதிரான இம்ரான் கானின் மேன்முறையீட்டு மனுவை இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், மேற்படி தண்டனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.