Header Ads



உயிருள்ள கெஹலியவின் பெயரில், பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது எப்படி..?


கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி, முன்னாள் அ​மைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் பெயரில் கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் அந்த பெயரை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


1996ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் உயிருள்ள ஒருவரின் பெயரை பாடசாலைக்கு பெயரிட முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஆனால் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல   சமூகத்திற்கு தவறான உதாரணத்தை காட்டி குண்டசாலை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை என பெயரிட்டுள்ளார்.


எனவே, உயிருடன் இருக்கும் ஒருவரின் பெயரை பாடசாலைகளுக்கு வைப்பதற்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  ஜோசப் ஸ்டார்லிங் வலியுறுத்தினார்.


No comments

Powered by Blogger.