Header Ads



முஸ்லிம்களின் எதிரி, இஸ்ரேல் என்ற எண்ணக்கருவை போக்கி...


அஷ் ஷெய்க்ஹ் ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத் (கபூரி)


இத்தனை ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் ஏன் எதற்கு?!!!

ஒன்றுமே புரியவில்லை…. ஓன்றுமே புரியவில்லையே!!!!


இப்படி மொட்டையாக எழுதினால், சிலபோது இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து எல்லோருக்கும் எளிதில் புரியலாம்.


கடந்த ஒக்டோர் 07ம் திகதி இஸ்ரேலில் நடந்த ஒரு கொண்டாட்ட நிகழ்வின் போது ஹமாஸ் போராளிகள் திடீரென இஸ்ரேலுக்குல் நுழைந்து இருநூருக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து காஸாவிற்குள் கடத்தி வந்தார்கள். இது தான் இன்றைய பலஸ்தீன இனப்படுகொலையை உலக நாடுகளின் மொத்த ஆசிர்வாதத்துடன் இஸ்ரேல் நடத்துவதற்கு கூறப்படும் காரணம்!!!


ஹமாஸினால் சிறைபிடிக்கப்பட்டவர்கள் எந்தவித துன்புருத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் ஆளாக்கப்படாமல் பத்திரமாக காஸாவிற்குள் அழைத்துவரப்பட்டார்கள். ஆனால் ஹமாஸ் இஸ்ரேலின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்துள்ளார்கள் என்ற செய்தியறிந்த இஸ்ரேலியப் படையினரே திக்குத்திசை தெரியாது துப்பாக்கி பிரயோகம் செய்ததால் தான் பல இஸ்ரலியர்கள் அன்றைய தினம் கொல்லப்பாட்டார்கள் என்ற செய்தி தற்போது தான் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளது. இதனால் இஸ்ரேலிய அரசு கடும் அதிருப்த்தியையும், இஸ்ரேலியிர்களின் வெறுப்பையும் உள்ளூரிலும் வெளியூரில் பெற்று வருகின்றது


ஹமாஸின் இந்த நடவடிக்கை பிழையானது என எம்மில் சில நல்ல? உள்ளங்கள் அவ்வப்போது பேசிவருவதும் எங்களது காதுகளை எட்டாமல் இல்லை. இங்கு இஸ்ரேலிற்கும் பாலஸ்தீன போராட்டக் குழுக்களுக்கும் இடையில் இருக்கும் பகையும், போராட்ட குணமும் திடீரெனத் தோன்றியதொன்றல்ல. கடந்த பல தசாப்த்தங்களான இருதரப்பும் நேரடி மற்றும் கட்டம் கட்டமான யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர். சுமார் 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருப்பதாக கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன. (இதில் கூடுதல் குறைவு என இருக்கலாம்)


இந்த கைதிகள் கடந்த ஒக்டோர் 07ம் திகதிக்கு பின்னர் கைதசெய்யப்பட்டவர்கள் அல்ல. இவர்கள் அவ்வப்போது இஸ்ரேலுக்கு தேவைப்படும் போது கைது செய்யப்பட்டவர்களே. இவர்களுள் 07 வயது முதல் 70 வயது வரையானவர்கள் இருக்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சி தரும் செய்தியாகும். கடந்த வாரங்களில் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்ற வேளை, இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுதலைபெற்ற பாலஸ்தீன கைதிகள், தாம் இஸ்ரேலிய சிறைகளில் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்ததாவும், தினம் தினம் துண்புருத்தல்களுக்கும், தண்டனைகளுக்கும் ஆளானதாகவும் தெரிவித்தனர்.



இதேவேளை ஹமாஸினால் கைதுசெய்யப்பட்டு விடுதலை பெற்றவர்கள், “தாம் எந்த வித துன்புருத்தல்களுக்குமோ, சித்திரவதைகளுக்குமோ ஆளாகவில்லை எனவும், தம்மை மிக கண்ணியமாகவே அனைவரும் நடத்தினர்” என்ற கூற்றும் உலக மக்களின் கண்களைத் திறந்தன. ஒக்டோர் 07ம் திகதி நடந்த சம்பவத்தை எமது மேதாவிகள் சிலர் வியாக்கியானம் கூறுகின்ற விதத்தை சகிக்காமலே ஒப்பீட்டுரீதியான இந்த விடயத்தை இங்கு கூறக் காரணம்.



பாலஸ்தீனின் எந்த மூலை முடுக்குகளிலும் உள்ள பாலஸ்தீனியர்களை வயது வித்தியாசமின்றி, எந்தவித அடிப்படைக் காரணமுமின்றி கைது செய்யவும், கொல்லவும் இஸ்ரேலுக்கு மட்டும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தீவிரவாதிகள் என்ற சொற்பிரயோகத்தை மாத்திரம் கூறி இத்தனை அநியாயங்களையும் இஸ்ரேல் நியாயப்படுத்தும். அதற்கு உலக நாடுகள் “இஸ்ரேலுக்கு தன்னைக் காத்துக் கொள்ள பூரண உரிமை உண்டு” என்று அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும் சான்றிதழ் வழங்கும்.


நான் மேலே சொன்ன நம்ம மேதாவிகள், இவர்களுக்கு தேவையா இந்த வேலை எனவும், சும்மா எதுக்கு கேட்டுத் திண்கனும் என்று கோப்பிக்கட ஸ்டைல்ல ஒரு குட்டி பிரசங்கமும் செய்வார்கள். இந்த மேதாவிகளுக்கு புரியாவிட்டாலும் இஸ்ரேல், பாலஸ்தீனில் புரிவது இனஅழிப்பு என்பதை உலக நாடுகளில் உள்ள பலர் புரிந்து வைத்துள்ளனர்.


இந்த புரிதலின் வெளிப்பாடே உலக அளவில் பாலஸ்தீன இனஅழிப்பை எதிர்த்து ஆர்பாட்டங்களும் கண்டன அறிக்கைகளும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. ஆர்ப்பாட்டங்கள், மரியல் போராட்டங்கள் பல தாக்கங்களை ஏற்படுத்திய வரலாறுகள் இருக்கின்றன. ஆர்ப்பாட்டகள் காரணமாக ஆட்சி கவிழ்க்கபட்டுள்ளமை, அரசின் தீர்மாணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை, தனிநாடுகள் உருவானமை என்று ஆர்ப்பாட்டங்களின் தாக்கம் அதிகம்.


ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை…


பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் புரிந்து வருகின்ற இந்த யுத்தம், யுத்தம் என்ற எல்லையையும் தாண்டி


இனஅழிப்பு,


சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளமை,


மனித உரிமை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை,


சிறுவர் உரிமை சீரழிக்கப்பட்டுள்ளமை,


போர்க் குற்றங்கள் போற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றமை,


என எல்லாவற்றையும் கண்டித்து உலக நாடுகள் பலவற்றில் தொடரான போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், சில நாடுகள் இஸ்ரேலுடனான ராஜதந்திர உறவுகளை துண்டித்தும், இன்னும் சில நாடுகள் இஸ்ரேலிய பிரதமரை போர்குற்றவாளி என அறிவித்தும், சர்வதேச விசாரணைக்கு இஸ்ரேலிய அதிகாரிகளை உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தும், ஏன் இஸ்ரேலியர்களே இஸ்ரேலுக்குள் போர் நிறுத்தத்தை வேண்டி வீதி மறியல் போராட்டங்களை நடத்தியும்,  இஸ்ரேலியர்கள் இஸ்ரேலில் தமது வீடுகளில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக பாலஸ்தீன கொடியை பறக்கவிட்டும், சுதந்திர பாலஸ்தீனே நிரந்தர தீர்வு என்று வலியுருத்தியும் போராட்டங்கள் நடத்தியும்,  இஸ்ரேலின் இனப்படுகொலை தொடர்கிறது என்றால்….


உண்மையில் ஒன்றுமே புரியவில்லை.


சுதந்திர நாட்டை சூரையாடி, சொந்த குடிகளை சொந்த நாட்டில் அகதிகளாக்கி பின்னர் அடிமையாக்கி வைக்க இஸ்ரேலுக்கு மட்டும் தான் முடியும் என்றால்!!! பெயருக்கு ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கி இஸ்ரேலின் அதிகாரத்தின் கீழ் தான் செயல்பட வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கவும் மீறினால் தீர்த்துக்கட்டவும், அதனை உலகிற்கு நியாயம் என்று நிரூபிக்கவும் அதை சரிகான வல்லரசுகள் தயாராகவும் இருக்கிற மனோநிலையை உருவாக்கவும் இஸ்ரேலால் மட்டும் தான் முடியும் என்றால்!!!


இத்தனையையும் செய்வதற்கு இஸ்ரேலுக்கு மட்டும் ஏன் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது!!! தினம் தினம் பாலஸ்தீனில் உள்ள பலநூரு இடங்களை குண்டு போட்டு அழித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலை மட்டும் தட்டிக் கேட்க ஆளில்லாமல் போனது எப்படி!!! பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழங்கள், உயர்கல்வி நிலையங்கள், வைத்திய சாலைகள், மதவழிபாட்டுத் தலங்கள், தொடர் மாடி குடியிருப்புக்கள், மனிதனது அத்தியவசியத் தேவையான நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நோயாளிகளை ஏற்றிச் செல்லும் Ambulance வண்டிகள், விவசாய நிலங்கள், தொழிற்சாலைகள், அங்காடிகள், மருந்தகங்கள்… (பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்) என ஒட்டு மொத்த நாட்டையும் அழித்து நாசமாக்க அதிகாரம் கொடுத்தது யார்!!!


ஓன்று மட்டும் புரியவில்லை…..


இல்லை.. இல்லை ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது…


ஆம் யூதர்கள் கொடுமையானவர்கள் என்பதை அமெரிக்கா மிகச் சரியாகவே எடைபோட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் என்ற அமெரிக்காவின் முறை தவறிப் பிறந்த குழந்தை மத்திய கிழக்கில் சர்வ வள்ளமையுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறது. வளைகுடா நாடுகளுக்கிடையில் நீண்ட காலப் போருக்கு பசலை இட்டபோதும் ஈராக் ஈரான் போரோடு மாத்திரம் அது நின்றுவிட்டமை ஏகாதிபத்தியவாதிகளுக்கு வயிற்றில் புளியை கரைச்சிட்டு. இனி மத்திய கிழக்கு எப்போதும் போர் மேகங்களால் சூழப்பட்டிருக்க வேண்டும் என்ற அவர்களது அவாவிற்கு இருப்பது இஸ்ரேல் என்ற நாடு மட்டுமே.


அவ்வப்போது இஸ்ரேலைத் தூண்டி பாலஸ்தீனில் யுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது மட்டுமே வளைகுடா நாடுகளின் ஒற்றுமையை உரசிப் பார்க்க முடியும். அவர்கள் ஒற்றுமைப்பட்டு விடக்கூடாது என்பதில் அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகள் மிகக் கவனமாக இருக்கின்றன. இதற்கான ஒரு ஒத்திகையாகவே ஒக்டோபர் யுத்தம் பரீட்சிக்கப்பட்டது.


இம்முறை யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது அமெரிக்காவும் இஸ்ரேலின் நட்பு நாடுகளும் சற்றே பயந்து விட்டன. ஹமாஸ் முன்னரைவிட தைரியமாக போரை முன்னெடுக்க தயாராக இருப்பதாக அறிவித்தது. இஸ்ரேலுக்கு மரண அடி கொடுத்து. ஈரான், லெபனான் என்பன ஹமாஸிற்கு தேவையான உதவிகளை வழங்கவும், தேவையேற்படின் யுத்தத்தில் நேரடியாக பங்குகொள்ளவும் தயார் என்பது போன்ற சமிக்ஞைகளை வெளியிட்டன.


இதனை சரியாக புரிந்து கொண்ட அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பூரண ஒத்துழைப்பையும், ஹமாஸை அழிப்பதற்கான எல்லையற்ற அனுமதியையும் வழங்கியது. இதன் விளைவாக எப்போதும் மனித உரிமை பற்றி அதிகம் பேசும் கனடா போன்ற நாடுகளும் இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஆதரிப்பதாக தெரிவித்தன.


அரபு நாடுகளின் கூட்டங்கள் பல நடந்தன. வழமைக்கு மாற்றமான கூட்டறிக்கைகள் இஸ்ரேலுக்கு எதிராக பறந்தன. ஓன்றுபட்டு விடுவார்களோ என்ற அமெரிக்காவின் பயம் மேலும் அதிகரித்தது. இவர்கள் ஒற்றுமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் ஒவ்வொரு அரபு நாடுகளுக்கும் சென்று நாடி பிடித்து பார்க்கும் வேலையை கச்சதிதமாக செய்துகொண்டிருந்தார்.


அவரது தேடலில் இம்முறை அரபுகள் ஒன்றுபட்டு விடுவார்கள் என்ற அச்சம் சற்று கூடுதலாகவே இருந்து. இந்தச் செய்தி இஸ்ரேலின் அச்சத்ததை மேலும் அதிகரித்தது. இதை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக இஸ்ரேல் சும்மா இருந்த சிரியாவின் விமான நிலைய ஓடுதளங்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு பத்திரமாக திரும்பியது. இதனால் இஸ்ரேல் இரண்டு விடயங்களை சாதித்துக் கொண்டது.


சும்மா இருந்த சிரியாவை தாக்கியதை மையப்படுத்தி அரபு நாடுகள் இஸ்ரேலுக்கெதிரான போரை அறிவிக்குமா என்பதும், இஸ்ரேலை தாக்கினால் அல்ல தாக்குவதற்கு நினைத்தாலே இது தான் பதிலாக அமையும் என்ற விடயத்தையும் வெகு சாமர்த்தியமாக செய்து முடித்தது இஸ்ரேல். எனவே அரபு நாடுகளிக்கிடையில் ஒற்றுமை இல்லை என்பதும் தம்மை தாக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்பதும் இஸ்ரேலுக்கு தெளிவாகிவிட்டது. அதைவிடவும், இஸ்ரேலின் இந்த தாக்குதலை எந்த நாடும் பெரிதாக கண்டித்ததாக தெரியவில்லை. ஏன் சிரியா கூட அச்ச மௌனம் காத்தது என்றே சொல்ல வேண்டும். இப்போ இஸ்ரேலுக்கு ஆத்ம திருப்த்தி.. 


என்றாலும் இந்த ஆவனத்தில் ஈரானையோ, லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பையோ, யெமனின் ஹ{திகளின் அமைப்பையோ இப்போதைக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என அமெரிக்க தன் செல்லப்பிள்ளைக்கு அருள் வாக்கு வழங்கிக் கொண்டிருந்தது. அவர்களுக்கான சந்தர்ப்பத்தை நாம் சரியான நேரத்தில் இஸ்ரேலுக்கு தருவோம் என்பதே அமெரிக்காவின் மறைமுகமான செய்தியாகவும் இருந்தது. ஈரான் விடயத்தில் அமெரிக்காவின் பார்வை சற்று அவதானம் கூடியதாகவே இருந்தது. இஸ்ரேலை பாதுகாக்கவும் வேண்டும், ஈரானை விட்டு பிடிக்கவும் வேண்டும் என்பது அமெரிக்காவின் திட்டம்.


எனவே ஹமாஸ் இஸ்ரேலிடையான போரில் ஈரான் தலையிட்டால், ஈரான் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கடும் தொணியில் ஈரானை மிரட்டியது அமெரிக்கா. இங்கும் ஒன்றும் புரியவில்லை… இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான யுத்தத்தில் இஸ்ரேலிற்கு துணையாக நிற்கவும், இஸ்ரேலைப் பாதுகாக்கவும் அமெரிக்கா உட்பட இஸ்ரேலின் நட்பு நாடுகளுக்கு எல்லா உரிமையும் இருக்கும் போது பாலஸ்தீனத்தையும், பாலஸ்தீன மக்களையும் பாதுகாக்க யாரும் துணைக்கு வரக்கூடாதாம்!!!


தொடர்ந்து கூடிய அரபு நாடுகளின் கூட்டம் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலின் நேச நாடுகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. ஏதோவொரு சந்தர்ப்பத்தில் இஸ்ரேலுக்கெதிரான ஒன்றிணைந்த போரை அறிவித்துவிடுமோ என பயந்தது அமெரிக்கா. எனவே இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக அமெரிக்காவின் மிகப் பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலை கொண்டுவந்து நிறுத்தியது அமெரிக்கா. தொடர்ந்து அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலும் இஸ்ரேலின் துணைக்கும் பாதுகாப்பிற்குமாக வந்தது.


அமெரிக்காவையும், இஸ்ரேலையும் சுற்றியிருந்த மரண அறிகுறிகள் மெல்ல மெல்ல நகர்ந்தன. இஸ்ரேலிற்கு தேவையான நவீன ஆயுதங்கள் அவர்கள் கேட்கமாலே வந்;தடைந்தன. மேலதிகமாக சில வெளிநாட்டுப் படைகளும் இஸ்ரேலிய இராணுவத்தோடு சேர்ந்து யுத்தத்தில் நேரிடியாக ஈடுபட்டன.


இடைவேலையாக ஒருவார போர் நிறுத்தத்தை இரு தரப்பும் அறிவித்தன. அரபு நாடுகளின் கஸானாவில் இருந்த பணங்கள் மீண்டும் பாலஸ்தீனத்தில் கொட்டுவதற்கான சந்தர்ப்பத்தை மேற்கு நாடுகள் வழங்கின. அரபு நாட்டு பணம் இடைக்கிடை பாலஸ்தீனில் இவ்வாரு கொட்டப்பட வேண்டும் என்பதும் அவர்களது திட்டமே. பலவருட உழைப்பு ஒரு சில மாதங்களில் இஸ்ரேலால் அழிக்கப்பட வேண்டும். அரபு நாடுகள் அடுத்த கட்ட நகர்வை பற்றி சிந்திப்பதற்கு இடமளிக்கப்படக் கூடாது. அந்த நோக்கத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மிக அழகாக கடந்த 75 வருடங்களாக செய்து வருகின்றன.


இப்போது பல விடயங்கள் தெளிவாக புரிகின்றன. அரபுகள் ஒற்றுமைப்பட்டு விடக்கூடாது!!! அப்படியே ஒற்றுமைப்பட நினைத்தால் ஷீஆ சுன்னி பிரச்சினையை ட்ரம்பாக பாவித்து பிரித்துவிட வேண்டும்!!! பாலஸ்தீன் இறையான்மையுள்ள சுதந்திர நாடாக ஒருபோதும் அங்கீகரிக்கப்படக் கூடாது!!! அரபுகளின் பொருளாதாரம் வருடத்திற்கொருமுறை இவ்வாரு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்!!! இராணுவ ரீதியாக தன்னை வளர்த்துக்கொள்ள எந்த அரபு நாட்டிற்கும் அருகதை இருக்கக் கூடாது!!! இஸ்ரேல் முஸ்லிம்களின் எதிரி என்ற எண்ணக்கருவை போக்கி இஸ்ரேலுடன் அரபுகள் கைகோர்க்க வேண்டும்!!! அகன்ட இஸ்ரேலை (The Great Israel) அடைய அரபுகளை அடிமைகளாக்கி முழு வளைகுடாவையும் இஸ்ரேல் ஆளவேண்டும்!!! உங்களுக்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

No comments

Powered by Blogger.